Skip to main content

பல்லி மாசாவை குடித்த பள்ளி மாணவிக்கு வாந்தி-மருத்துவமனையில் அனுமதி!

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா பால்நாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரத். அவரது வீட்டுக்கு சென்னையில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களை அக்டோபர் 9ந் தேதி மாலை வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களை ஊருக்கு அனுப்புவதற்காக தனது 13 வயது மகளுடன்  திருப்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார்.

 

incident in vellore

 

பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஒன்றில் இருந்து தனது மகள் குடிக்க மாசா வாங்கி கொடுத்துள்ளார். அங்கேயே அதனை திறந்து அப்போதே குடிக்க தொடங்கியுள்ளார். உறவினர்களை பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்ட நேரத்தில் பரத்தின் மகள் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியான பரத் தனது மகளை உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் புட் பாய்சனாகியுள்ளது எனக்கூறியுள்ளனர். சந்தேகமடைந்த பரத் தான் வாங்கி கொடுத்த மாசாவை திறந்து பார்த்தபோது அதில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

 

hh


இதுப்பற்றி அந்த கடையில் சென்று விசாரித்தபோது, எங்களுக்கு தெரியாது எனச்சொல்லியுள்ளார் கடை உரிமையாளர். இது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசனை செய்து வழக்கு தொடரலாம்மா என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
25 years in prison for a construction worker for A 9-year-old girl was misbehaviour in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.