Skip to main content

ஐஸ்கிரீமில் விஷம்; குழந்தைகளுடன் தாய் எடுத்த பரிதாப முடிவு; கணவர் கைது!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
Poison in ice cream; A tragic decision made by the mother with the children; Husband arrested

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் வைத்துக் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ளது புல்லாகவுண்டம்பட்டி. அங்குள்ள அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல். இவருடைய மனைவி சுகமதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான கோகுல் மகளிர் குழுவில் வாங்கிய கடனை கட்டுவது தொடர்பாக வீட்டில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக நடந்த சண்டையில் சுகமதி தனது கணவர் கோகுலைத் தாக்கியுள்ளார்.

இதனால் கணவர் கோகுல் அவருடைய பெரியம்மா வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த பத்து நாட்களாக கணவனைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்காததால் சுகமதி மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த சுகமதி ஐஸ்கிரீமில் விஷம் கொடுத்து இரண்டு பெண் குழந்தைகளையும் கொன்றுவிட்டு சுகமதியும் தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் தற்கொலைக்கு தூண்டியதாகக் கணவர் கோகுலைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்