Advertisment

எலிமருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட மாணவி பலி!

poison coated carrot ate and student passed away

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர்கள் தேவசித்து (55)- கிரேஷி அம்மா (52) தம்பதியர். இவர்களுக்கு எனிமா ஜாக்குலின் (19) பிராங்குலின் (16) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். தேவசித்து சென்னையில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை கவனித்து வருகிறார். கிரேஷி அம்மா செங்குட்டைப்பாளையத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.

Advertisment

கடைக்கு பின்புறம் அவர்களின் வீடு உள்ளது. இந்நிலையில் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் அதனை கட்டுப்படுத்த கேரட்டில் விஷமருந்து தடவி கிரேஷி அம்மா வைத்துள்ளார். இது தெரியாமல் அந்த கேரட்டை எனிமா ஜாக்குலின் சாப்பிட்டுள்ளார். உடனே அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி எனிமா ஜாக்குலின் பரிதாபமாக உயிரிழந்தார்.இதில் எனிமா ஜாக்குலின் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Coimbatore student
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe