Advertisment

சிவகாசியில் கோழிக்கறியில் விஷம்; சகோதரனுக்கு சகோதரி வைத்த விஷத்தால் 4 பேர் பலி

நேற்று சிவகாசியில் ரட்சன்தியேட்டர் பின்புறம் உள்ள ஒரு அரசு மதுபானக்கடையில் நேற்றிலிருந்து எட்டுநபர்கள் கூட்டாக மதுஅருந்தியுள்ளனர். அதேபோல் சிவகாசியில் உள்ள மற்றொரு அரசு மதுபானக்கடையில் தொடர்ந்து இன்றுமது அருந்தியுள்ளனர். இப்படி மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ற அனைவருக்கும் வாந்தி மயக்கம் தலைசுற்றல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில்நான்குபேர் இறந்துள்ளனர். நான்குபேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

Advertisment

poison

இந்த சம்பவம் குறித்து போலீசார் ஏழு தனிப்படை அமைத்துபல்வேறு கோணத்தில் விசாரித்து வந்தனர். இறந்த மூன்று பேரும் சாப்பிட்ட உணவில்விஷம் இருந்துள்ளதுஎன கண்டறிந்த போலீசார் விஷம் மதுவில் கலக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சாப்பிடும் உணவில் கலக்கப்பட்டதா என விசாரித்து வந்தனர். இந்த சம்பவத்தில்திடுக்கிடும் தவகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது தன் நண்பர்களுடன் மது அருந்திய முருகன் என்பவர் கொண்டுவந்த கோழிக்கறியில் விஷம் இருந்ததாக தெரியவந்துள்ளது. முருகன் என்பவரின் சகோதரி வள்ளி கணவரை பிரிந்து தனது தம்பியான முருகன் வீட்டில் வசித்து வந்துள்ளார் அப்பொழுது அந்த பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருடன் வள்ளிக்குகள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

Advertisment

இதை அறிந்த தம்பிமுருகன்வள்ளியைஎச்சரித்துள்ளார். இதனால் கோபமடைந்த வள்ளி இதை செல்வத்திடம் கூறியுள்ளார். நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் முருகனை கொல்வதுதான் வழி செல்வம்கூறியுள்ளான். இதைத்தொடர்ந்து கோழிக்கறியில் குருணைமருந்து வைத்து சமைத்து தனது தம்பிக்கு கொடுத்துள்ளார் வள்ளி. அதைவாங்கிக்கொண்டு சென்ற முருகன் மது அருந்தும்பொழுதுதனது நண்பர்களுக்கும் அதை கொடுத்துள்ளார். இப்படி விஷம் கலக்கப்பட்ட கோழிக்கறியை சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது முருகன் உட்படகணேசன்,கவுதமன், முகமது, இப்ராகிம்எனநான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.இதைத்தொடர்ந்து போலீசார் வள்ளி மற்றும் செல்வத்தை விசாரித்து வருகின்றனர்.

murder Sivakasi tasamak
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe