Skip to main content

காதல் திருமணம் செய்த மகன் - விஷம் குடித்து பெற்றோர் தற்கொலை

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
Poison


    
மகன் காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் பகுதியை சேர்ந்தவர்கள் பத்மநாபன் - சண்முகலட்சுமி தம்பதியினர். இவர்கள் அதே பகுதியில் மதுரை சாலையில் ஓட்டல் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 24 வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

கடந்த 26-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பத்மநாபனும், சண்முகலட்சுமியும் விஷம் குடித்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்பத்மநாபனும், சண்முகலட்சுமியும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசார் விசாரணை நடத்தினர். மணிகண்டனுக்கும் கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணத்துக்கு மணிகண்டனின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 25-ந் தேதி மாரியம்மாளை ஒரு கோவிலில் வைத்து மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். இதனால்தான் பத்மநாபனும், சண்முகலட்சுமியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

சார்ந்த செய்திகள்

Next Story

மேய்ச்சலுக்காக சென்ற 7 ஆடுகளை விஷம் வைத்து கொன்றவருக்கு வலைவீச்சு!

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

person who poisoned to  7 sheep that went for grazing... police investigation

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.

 

இந்நிலையில் பன்னீர்செல்வம் வழக்கம்போல் ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்வெளி பகுதிக்கு கொண்டு சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதே ஊரை சேர்ந்த ராமானுஜம்  மகன் பாலமுருகன் என்பவரின் வயல் பகுதிக்கு ஆடுகள் சென்றதாக கூறப்படுகிறது. வயலுக்குச் சென்ற ஆடுகள் பல மணி நேரமாக வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பன்னீர்செல்வம் மேய்ச்சலுக்கு செல்லும் பகுதிக்கு சென்று பார்த்தபோது பாலமுருகனின் வயலில் 5 ஆடுகள் இறந்து கிடப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதேபோல் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் என்பவரின் இரண்டு ஆடுகளும் இறந்து கிடந்தன.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில் பாலமுருகன் என்பவரது வயலில், ஆடுகள் இறந்து கிடப்பதால், அவரை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  ஆடுகள் எவ்வாறு இறந்தது என்றும்,  கொடிய விஷத்தை கலந்து கொடுத்து ஆடுகளை கொன்றார்களா? அல்லது முன்விரோத பகையின் காரணமாக கொன்றார்களா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். மேய்ச்சலுக்காக சென்ற, ஆட்டை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

 

Next Story

போலீசார் முன்பு விஷம் குடித்த பெண்! 

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

The woman who drank poison before the police

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளது கடுவனூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்குச் சொந்தமான இடம் குறித்து பக்கத்து இடத்தைச் சேர்ந்தவர்களுடன் ஜெயலட்சுமிக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி ஏற்கனவே புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரது புகார் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனமுடைந்து கவலையில்  இருந்துள்ளார்.

 

ஜெயலட்சுமி இதுகுறித்து காவல் நிலையத்திற்குப் பலமுறை நடையாய் நடந்தும் அவரது புகாரின்மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை. இதனால் பொறுமையிழந்த ஜெயலட்சுமி, நேற்று (29.06.2021) சங்கராபுரம் காவல் நிலையம் முன்பு பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து தலைமைக் காவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஜெயலட்சுமி மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தான் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வேதனையின் காரணமாக விஷம் குடித்த பெண்ணின் மீதே போலீசார் வழக்குப் பதிவுசெய்த சம்பவம் சங்கராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.