Advertisment

போலீஸ்காரரால் என் குழந்தையின் உயிருக்கு ஆபத்து! நடிகர் தாடி பாலாஜி 

நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.

Advertisment

b

இதற்கிடையில் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் ஷோவில் இருவரும் பங்கேற்றனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மீண்டும் சேர்ந்த வாழ்வதாக முடிவெடுத்தனர். மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்த இவர்களை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் வாழ்த்தினார். இந்நிலையில் இன்று நடிகர் தாடி பாலாஜி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் நித்யா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

Advertisment

b

நான் நிதியாவிற்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். ஜிம் பயிற்சியாளர், போலீஸ்காரர் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நித்யா. நித்யாவின் இந்த நடவடிக்கையினால் நான் மன உளைச்சலில் இருக்கிறேன். குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது.

b

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யா நடந்துகொண்டது அனைத்துமே நடிப்பு. அந்த நிகழ்ச்சியில் வெளியே வந்ததும் நான் அம்மா வீட்டிற்குத்தான் சென்றேன். என் குழந்தையை பார்க்க விடவில்லை நித்யா. என் குழந்தை போஷிகாவுக்கு நித்யாவாலும், போலீஸ்காரராலும் ஆபத்து உள்ளது. போலீசார் இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை’’ என்று தெரிவித்தார்.

actorbalaji kamal nithya poice vijaytv
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe