Advertisment

இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டி: வென்றவர்களுக்கு கேடயம் பரிசளிப்பு!

Advertisment

தமிழகத்தில் உள்ள இலங்கைதமிழர் மறு வாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு குடியரசு தினத்தன்று கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்பாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டன. அமைச்சர் செஞ்சி மஸ்தான் இணைய வழியில் இதனைத் தொடங்கி வைத்திருந்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை நந்தனம் ymca அரங்கில் நடைபெறும் புத்தக காட்சியின் சிற்றரங்கில் நேற்று (பிப். 24) அன்று மாலை கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், நக்கீரன் பொறுப்பாசிரியரும், இலங்கை தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினருமான கோவி. லெனின், கவிஞர் ஜெயபாஸ்கரன், எழுத்தாளர்கள் பாமரன், விஜயலட்சுமி, இனியன், நாகப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe