Advertisment

தெய்வமே நின்றாலும் வீழ்த்த வேண்டும்!

ப்

டல்வெறியும் வக்கிரமும் திமிரும் கொண்ட

உல்லாச மிருகங்கள் உலவ லாமா?

அடங்காத புலன்வெறியால் இந்த மண்ணை

அழுக்காக்கும் வக்கிரர்கள் வாழ லாமா?

உடம்பன்றி உலகத்தில் எதுவும் இல்லை

உணர்வில்லை; உயிரில்லை; என்ற வாறு

தடம்புரண்டு மங்கையரை வேட்டை யாடும்

தறுதலைகள் இம்மண்ணில் இருக்க லாமா?

வன்புணர்வும் இவன்களுக்குப் பொழுது போக்கா?

வாழ்விடமே பெண்களுக்கு மரணத் தீவா?

அன்புலகின் வேர்களிலே தீயை வைக்கும்

அறக்கேடர் உயிரோடு திரிய லாமா?

இன்னதெனத் தெரியாமல் இவர்க ளாலே

இறக்கின்றார் பெண்களெனில் இதுவும் நாடா?

அன்றாட நிகழ்வாகும் வன்பு ணர்வை

அடக்காத சட்டங்கள் என்ன சட்டம்?

பெருமிதமாய் உலகாளும் பெண்டி ரெல்லாம்

பேயர்களை எதிர்கொள்ளத் துணிய வேண்டும்!

பெருங்கருணை இனிவேண்டாம்; இந்த மண்ணில்

பெண்களுக்குத் தற்காப்புக் கருவி தேவை!

கருங்காலி எவனேனும் வம்பு செய்தால்

கன்னியர்கள் அவன்தோலை உரிக்க வேண்டும்!

திருவுடைய பெண்குலத்துக் கெதிராய் அந்தத்

திருவுடைய பெண்குலத்துக் கெதிராய் அந்தத்

தெய்வமே நின்றாலும் வீழ்த்த வேண்டும்!

poet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe