Poet Vairamuthu melts into SBP demise

Advertisment

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பிபாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டுஅவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பிஉடல் நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளன நிலையில், அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு முழுவதும் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல் அவரது உடலுக்குகட்டுப்பாடுகளுடன் இறுதி அஞ்சலி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

Ad

''இசையை இழந்த மொழியாய் அழுகிறேன். ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்கு கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்து விட்டதே காலம்'' எனஎஸ்.பி.பியின் மறைவுகுறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.