Advertisment

‘கவிஞர் திருநாள் விருது’ பெற்ற கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்

நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் இலக்கியவாதியுமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு இந்த ஆண்டுக்கான கவிஞர் திருநாள் விருதைக் கவிஞர் வைரமுத்து வழங்கினார்.

Advertisment

ஆண்டுதோறும் தனது பிறந்த நாளான ஜூலை 13 ஆம் தேதி, பிரபல கவிஞர் ஒருவருக்கு ‘கவிஞர் திருநாள் விருதை’ தன் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர் வைரமுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இப்போது இந்த வருட விருதை, நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும், இனிய உதயம் இலக்கிய இதழின் இணையாசிரியருமான ஆரூர் தமிழ்நாடனுக்கு வழங்கப்பட்டது.

Advertisment

Poet Thirunal Award winning poet Aroor from Tamil Nadu

இந்நிகழ்வில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், விருது பெற்ற நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு நக்கீரன் ஆசிரியர் தனது வாழ்த்தைத்தெரிவித்தார்.

Vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe