கடந்த ஒன்பதாம் தேதி நக்கீரன் பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.இந்த கைதுக்குபல அரசியல் தலைவர்கள், ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கவிஞர் மு.மேத்தா அவர்கள் இந்த கைது குறித்து கூறியுள்ளதாவது,
குட்டிச் சுவர்களால்...
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பவர்நக்கீரன். கோபால் அதை நிரூபித்திருக்கிறார்.
சீனப் பெருஞ்சுவரைவிட வலிமையுள்ளவர்கள் நீதிக்காகப் போராடுகிறவர்கள். குட்டிச் சுவர்களால் அவர்களை எட்டிப் பார்க்கக் கூட இயலாது.