veeramani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அண்மையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதைக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான கொலைமிரட்டல் போன்ற விமர்சனத்தை முன்வைத்தார் இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரு கவிதைக்கு மத உள்நோக்கம் கற்பித்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் விடுவது கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக பிஜேபியின் தேசியச் செயலாளர் என்று இருக்கக்கூடிய ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக பேசுவது - கேவலமான வார்த்தைகளை உதிர்ப்பது என்பதெல்லாம் அவர் சார்ந்த கட்சிக்குப் பெருமை உடையதாக இருக்கலாம்; ஆனால் பொது வெளியில் கண்டிக்கத்தக்கது.

Advertisment

என்னைக் கொல்ல விரும்புகிறார்கள் - எனக்கு ஏற்படும் எந்த அபாயத்திற்கும் அவர்தான் பொறுப்பு என்று வெளிப்படையாகவே திரு.மனுஷ்யபுத்திரன் கருத்துக் கூறியுள்ளார். இதனைக் காவல்துறை அலட்சியப்படுத்தாமல் ஊடகப் பெண்களை இழிவுபடுத்திய ஒரு சினிமா நடிகர் விஷயத்தில் காவல்துறை நடந்து கொண்ட தவறான அணுகுமுறையை பின்பற்றாமல், தமிழகம் அறிந்த கவிஞர் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அசாதாரணமானது - காவல்துறை விரைந்து செயல்படுதல் அவசியம் என கூறியுள்ளார்.