மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாகத் திறக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான சென்னை போயஸ் கார்டனில் உள்ள 'வேதா' நிலையத்தை நினைவில்லமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ. தீபக், மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சேசஷாயி முன்பு இன்று (27/01/2021) விசாரணைக்கு வந்தபோது, சென்னை போயஸ் கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தைத் திறக்க தடையில்லை. வழக்கு முடியும் வரை நினைவு இல்லத்தை,பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.