Nakk

Advertisment

நக்கீரன் மற்றும் புனே ஸ்ரீ பாலாஜி சொசைட்டி கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கவிதைப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் வெற்றிபெறும் மாணவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும். இதுவரை கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்களில் இருந்து, தற்போதுவரை தேர்வாகியுள்ள கவிதைகளைத் தரம்பிரிக்கும் வேலைகள் புகழ்பெற்ற கவிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

தேர்வான கவிதைகளும், தேர்வுசெய்யும் கவிஞர்களின் பெயர்களும் ஒவ்வொரு மாதமும் இனிய உதயம் இலக்கியத் திங்களிதழில் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது, இந்த கவிதைப் போட்டிக்கான இறுதிச்சுற்றின் முதல்சுற்று பணிகள் தொடங்கிவிட்டன. அதன்படி, சென்னையிலுள்ள நக்கீரன் அலுவலகத்திற்கு வந்திருந்த கவிஞர்கள் பிறைசூடன், பிருந்தா சாரதி மற்றும் விவேகா ஆகியோரிடம் நக்கீரன் ஆசிரியர் கவிதைக் கோப்புகளை வழங்கினார். இனிய உதயம் இணையாசிரியர் ஆரூர் தமிழ்நாடன் உடனிருந்தார்.

இறுதிச்சுற்றில் வெற்றிபெறப் போகும் அந்தக் கவிதை இளவரசர் யார் என்பதை அறிய, தொடர்ந்து இனிய உதயம் இலக்கியத் திங்களிதழோடு இணைந்திருங்கள்.