கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சுரேஷ் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் பிரிவில் அவரை ஆஜர்ப்படுத்த போலீசார் அழைத்துவந்தனர்.
அப்போது குடி போதையில் வந்த சுரேஷை விசாரிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் சுரேஷை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை அழைத்துச்சென்றபோது அவர் குடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மீது போக்ஸோ வழக்குடன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.