Advertisment

போக்சோ கைதி தற்கொலை! 

Pocso prisoner passed away

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகில் உள்ள பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் என்கிற சந்தோஷ்(28). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சேத்தியாதோப்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 23ஆம் தேதி சிதம்பரம் கிளைச் சிறையில் இருந்த சந்தோசை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிதம்பரத்தில் இருந்து அழைத்துச் சென்றனர்.

Advertisment

நீதிமன்றம் அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கிய நிலையில் மீண்டும் சிதம்பரம் சிறையில் அடைப்பதற்காக அழைத்து வரும்போது கடலூர் நீதிமன்றம் அருகே தனக்கு வயிறு வலிப்பதாக சந்தோஷ் கூறியுள்ளார். தான்,எலி பேஸ்ட்டை எடுத்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு பதறிப்போன போலீசார் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் சந்தோஷை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட சந்தோஷ், எலி பேஸ்ட் சாப்பிட்டு இறந்து போனது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisment

POCSO Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe