Advertisment

போக்சோ கைதி விஷம் குடித்து தற்கொலை

nn

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் தலைக்காவிரி மேலத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (46). இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் வல்லம் போலிசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த மாதம் 28 ந் தேதி புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த 5 ந் தேதி ரமேஷ் க்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் சிறைத்துறையினர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நேற்று இரவு ரமேஷ் சிகிச்சை பெற்ற வார்டில் விஷம் குடித்த ஒருவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்ததுடன் அவர் என்ன விஷம் குடித்துள்ளார் என்பதை மருத்துவர்களிடம் காட்ட விஷப் பாட்டிலையும் கொண்டு வந்து வைத்திருந்தனர்.

இதைப் பார்த்த போக்சோ கைதி ரமேஷ் யாருக்கும் தெரியாமல் விஷப் பாட்டிலை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். கழிவறைக்கு செல்ல அனுமதித்த நிலையில் உள்ளே சென்ற ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளார். இந்நிலையில் உடல்நிலைமோசமான நிலையில் இருந்த ரமேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hospital police Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe