Advertisment

கோவையில் தொடரும் போக்ஸோ வழக்குகள்! 

POCSO cases to continue in Coimbatore!

கோவை சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் கர்ணன் என்ற லிங்கேசன் (33). தச்சுத்தொழிலாளியாக வேலை செய்துவரும் இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகிவந்துள்ளார். மேலும் லிங்கேசன், அந்தச் சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி தனிமையிலும் இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி 5 மாத கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவுசல்யா விசாரணை நடத்தி, லிங்கேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Advertisment

அதேபோல் ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த மது (23) என்பவர் கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் கட்டட தொழிலாளியாக வேலை செய்துவந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி கடத்திச்சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதனைத் தொடர்ந்து பேரூர் இன்ஸ்பெக்டர் பர்வீன்பானு, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து மதுவை கைது செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisment

Coimbatore POCSO ACT
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe