pocso case chennai special court judgement

சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து சித்ரவதை செய்த நபருக்கு 41 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

சென்னையைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் 2015- ஆம் ஆண்டு 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர், மதுபோதையில் அடித்து உதைத்தும், உடலில் சூடு வைத்தும் சித்ரவதைச் செய்ததோடு, பாலியல் வன்கொடுமையும் இழைத்துள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் கருணாகரன் மீது போக்ஸோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

Advertisment

விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதி ராஜலட்சுமி, கருணாகரன் மீதான 6 குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதால், அனைத்து குற்றங்களுக்கும் சேர்த்து மொத்தம் 41 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூபாய் 36,000 அபராதமும் விதித்தார். தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவும், அனைத்து தண்டனைகளையும் அனுபவித்த பின், கடைசியாக ஆயுள் தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளார்.