Advertisment

குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

POCSO case against person who took video of girl taking bath

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் விருப்பம்பதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம்(23). பெயிண்டர். இவர் அதே பகுதியில் பெண்கள் குளியலறையில் குளிக்கும் போது அவர்களுக்குத்தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று 17 வயது மாணவி குளிக்கும்போது, ஜீவானந்தம் தனது செல்போனில் வீடியோவாக அதைப் பதிவு செய்ததைஅந்தப் பெண் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

Advertisment

இது குறித்து அந்த பெண் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை அடுத்துகாஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார், ஜீவானந்தத்திடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரின்செல்போனை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அந்த 17 வயது மாணவி குளித்த வீடியோ இருந்ததை உறுதி செய்தனர்.

Advertisment

இதை அடுத்து காஞ்சிக்கோவில் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஜீவானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

arrested police POCSO Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe