POCSO case against milk shopkeeper

திருச்சியில்ஆறாம் வகுப்பு பயின்று வந்த சிறுமிக்கு பால்கடைக்காரர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்த பள்ளி சிறுமி ஒருவர் அதிகாலையில் பால் வாங்குவதற்காக அருகில் உள்ள பால் கடைக்கு சென்று உள்ளார். அப்பொழுது கடையிலிருந்த பால் கடையின் உரிமையாளர் எழிலன் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி அவரது தாயிடம் கூற சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து பால்கடை உரிமையாளர் எழிலன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை எழிலன் தலைமறைவாகஉள்ள நிலையில் பாலியல் தொல்லைகொடுத்த பால் கடை உரிமையாளரான எழிலனை போலீசார் தேடி வருகின்றனர்.