சேலத்தில்பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனே கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், புதன்கிழமை (மார்ச் 15)திடீரென்று வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து பெற்றோர் அந்த சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்குசிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவப் பரிசோதனையில்அந்த மாணவி 5 மாதங்கள்கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்தபோது, தங்கள் வீடு அருகே உள்ளவேறுபள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவனும்சிறுமியும் காதலித்து வந்துள்ளது தெரியவந்தது. பெற்றோர் வீட்டில் இல்லாதபோது அந்தச் சிறுவன்சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறான். அவர்கள் நெருங்கிப் பழகியதில்அந்தச் சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாணவன் மீது போக்சோசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுத்த மாதம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்ததும், அதற்கு பத்தாம் வகுப்பு மாணவனேகாரணமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.