Father jailed for 20 years

6 வயது மகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

புதுச்சேரி உழவர்கரை பகுதியை சேர்ந்த 31 வயது கார் டிரைவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே டிரைவர் தமது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவாகி உள்ளது. இதை அறிந்த மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கன்னியகோவிலில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு மகளுடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனது மகளை காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் உறவினர் ஒருவர் மூலம் சிறுமியை அனுப்பிய நிலையில் அங்கு வந்த டிரைவர் சொந்த மகள் என்றும் பாராமல் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் கடந்த 13/4/2022 அன்று டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.

Advertisment

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் (மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி) நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி செல்வநாதன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளியான டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்குவும் அரசுக்கு உத்தரவிட்டார். கடந்தாண்டு ஏப்ரல் 13ஆம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓராண்டு கழித்து அதே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம்(54) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் இவர் தாயார் இறந்துவிட கடந்த ஆறாம் தேதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அன்றே அவரது இறுதிச் சடங்குகள் முடிந்தன. மறுநாள் ஏழாம் தேதி இரவு அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அங்குள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போது செல்வம் மாணவியிடம் 'பீடி வாங்கிக் கொண்டு வா' என காசு கொடுத்துள்ளார். அந்த மாணவியும் கடைக்கு சென்று மளிகைப் பொருட்களை வாங்கிக்கொண்டு பீடியை செல்வத்திடம் கொடுத்த போது எதிர்பாராத விதமாக மாணவியின் கையை பிடித்து இழுத்து வாயை பொத்தி அருகில் உள்ளகாட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் செல்வம். இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.