pmo narendra modi national addressing actor kamal hassan tweet

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவு 08.00 மணிக்கு (12.05.2020) தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறியதாவது,"கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான 4 ஆம் முழு முடக்கம் மாறுபட்டதாக இருக்கும். கரோனாவைச் சுற்றியே வாழ்க்கையை வைத்திருக்க முடியாது என்பதால் புதிய வடிவில் 4 ஆம் முழு முடக்கம். 4 ஆம் கட்ட முழு முடக்கம் புதிய விதிமுறைகளைக் கொண்டதாக இருக்கும். ரூபாய் 20 லட்சம் கோடிக்கு பொருளாதாரச் சிறப்புத் திட்டங்களை பிரதமர் அறிவித்தார். சிறப்புப் பொருளாதார தொகுப்பு குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார்" என்றார்.

pmo narendra modi national addressing actor kamal hassan tweet

இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமானகமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் அறிவித்த திட்டம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்குப் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா? என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது. உணவின்றி அழும் குழந்தை, பணமின்றி தவிக்கும் ஏழைக்குப் பிரதமர் அறிவித்த திட்டத்தை வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.