தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக ஒன்றிய செயலாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

அரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல். திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகரான கருணாநிதி ஆகிய இருவருக்கும் தேர்தல் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 Village

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திமுக ஒன்றியச் செயலாளரின் மகன் விக்கி மற்றும் அவரின் நண்பர் ராஜா ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தனர்.

Advertisment

இந்த வழக்கில் பாமக பிரமுகர் கருணாநிதியின் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சில மர்மநபர்கள் நேற்றிரவு கள்ளூர் பாலம் அருகே சரண்ராஜை உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மர்ம நபர்கள் தாக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே சரண்ராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இந்த கொலை விவகாரம் தொடர்பாக திமுக ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல், அவரின் மகன் விக்கி மற்றும் அவரின் ஆதரவாளர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த திமுக ஒன்றிய செயலர் ஜோதிவேல் என்பவரது மகன் பூவரசன், உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.