தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் இன்று தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி கலந்துகொண்டார்.
அதுபோல், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, பாமக மத்திய மாவட்டச் செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்டச்செயலாளர் திலிப் குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் பிரின்ஸ், புறநகர் மாவட்ட செயலாளர் வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான பாமகவினர் கலந்துகொண்டனர்.