Advertisment

பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூல்? - பாமகவினர் திருவோடு ஏந்தி போராட்டம்!

pmk struggle due to extra fee collection in school

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை காந்தி ரோடு பகுதியில் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் மாணவர்களின் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளியின் நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து திருவோடு ஏந்தி 50க்கும் மேற்பட்ட பாமகவினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Advertisment

pmk struggle due to extra fee collection in school

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்தமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் காந்தி ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

pmk Vellore school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe