Advertisment

அதிசயம் நிகழ வேண்டும்! டுவிட்டரில் ராமதாஸ்!

 ramadoss

Advertisment

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரபாகரன் பிறந்தநாளையொட்டி பதிவிட்டுள்ளார்.

அதில், பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சி திறன், மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன் பிரபாகரனுக்கு 65ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள். படைகளால் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களாலும் சீரழிந்து கிடக்கும் தமிழீழத்தை சீரமைத்து, சிறப்பான ஆட்சி வழங்குவதே புலிகளின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதை!

மாவீரர்கள் மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மொழி, கலாச்சார, பண்பாட்டு சீரழிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; தாங்கிக் கொள்ள முடியாதவை. இந்த சீரழிவுகளை சரி செய்து தமிழர்களின் உன்னத, அறம் சார்ந்த வாழ்க்கை முறையை மீட்டெடுக்கவாவது அந்த மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

twitter Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe