பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவருமான ராமதாஸ் அவர்கள் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துபேசுகையில்,

Advertisment

பெரியார் குறித்து அவதூறாக பேசுவதும்,அவரது சிலைக்கு அவமரியாதை செய்பவர்களை கடுமையான சட்டத்தை கொண்டும் குறைந்தபட்சம் குண்டர் சட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்தவர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தபட்டு சரியான திசையில் செல்கிறது என்பதை நம்பலாம். சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

pmk ramadoss interview

எப்பொழுதுமே ரஜினி செய்தியாளரின் கேள்விக்கு எச்சரிக்கையாகவே இருப்பார். பெரியார் பற்றி ரஜினி தவிர்த்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஏனென்றால் பெரியார் என்பவர் பகுத்தறிவு பகலவன்.

Advertisment

எங்கள் கருத்துக்களுக்கு வழிகாட்டி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை கொண்ட அவரது சிலைக்கு அவமரியாதை செய்வது, சகித்துக்கொள்ள முடியாது.அவமரியாதை செய்பவர்கள்பைத்தியமாக தான் இருக்க வேண்டும்.

பெரியார் குறித்து அவதூறாக பேசுவதும், அவரது சிலைக்கு அவமரியாதை செய்பவர்களை கடுமையான சட்டத்தை கொண்டும் குறைந்தபட்சம் குண்டர் சட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற கேள்வியே தவறானது. தமிழிலே தஞ்சை கோவிலுக்கு குடமுழுக்கு செய்யவேண்டும்.

பெரியாரின் சிலையை அவமரியாதை செய்பவர்கள் காட்டுமிராண்டித்தனமான செயல். தற்போது நடைபெறும் தமிழக அரசு சட்ட ஒழுங்கு, நிர்வாகம் முதலானவைகளில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கான விருதை பெற்று இருப்பது பாராட்டுக்குரியது.