
இன்று (13/09/2021) சென்னையில் நடைபெற்ற பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ்- சௌமியா ராமதாஸின் மகள் சங்கமித்ரா சௌமியா அன்புமணி- த.ஷங்கர் பாலாஜி ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக் கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.