Skip to main content

குச்சிப்பாளையம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? ராமதாஸ்

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:   ’’கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட குச்சிப்பாளையம் கிராமத்தின் மீது, அருகிலுள்ள மேல்கவரப்பட்டு காலனியைச் சேர்ந்த கும்பல் ஆயுதங்களுடன் படையெடுத்துச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த வன்னியர்களின் சொத்துகள் சூறையாடப் பட்டுள்ளன. மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும்.

 

r

 

குச்சிப்பாளையம் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திடீரென ஏற்பட்ட மோதலில் விளைவாக நடத்தப்பட்டது அல்ல. இந்தத் தாக்குதல் வன்னியர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அங்குள்ள திடலில் இன்று காலை கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேல்கவரப்பட்டு காலனியைச் சேர்ந்த லெனின், திவாகர் ஆகியோர் குச்சிப்பாளையம் இளைஞர்களிடம் சென்று தகராறு செய்துள்ளனர். அப்பகுதியில் தலித்துகள் அதிகம் வசிப்பதால், அவர்கள் அடிக்கடி இது போல தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதனால் வீண் வம்பு செய்த அவர்களிடம்  பதில் தகராறு செய்ய விரும்பாமல் அந்த இளைஞர்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்பிச் சென்று விட்டனர்.

 

ஆனால், லெனின், திவாகர் ஆகிய இருவரும் ஏற்கனவே வகுக்கப்பட்ட நாடகத்தின்படி குச்சிப்பாளையம்  இளைஞர்கள் தங்களைத் தாக்கி விட்டதாக தங்கள் காலனியைச் சேர்ந்த  விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சீத்தாராமன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி ஏற்கனவே தயாராக இருந்த அவர்கள் சிறிய சரக்குந்தில் அரிவாள், உருட்டுக்கட்டை, கரப்பாரை உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் குச்சிப்பாளையம் கிராமத்திற்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

 

அங்கிருந்த வீடுகள் மீது கற்களை வீசியும், உருட்டுக் கட்டைகளால் அடித்தும் சூறையாடிய அந்த கும்பல், தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களையும்  அடித்து நொறுக்கியது. இந்தத் தாக்குதலில் 25&க்கும் மேற்பட்ட வீடுகளும், 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளன. 8 பேர் படுகாயமடைந்து பண்ருட்டி மருத்துவமனையில்  மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

குச்சிப்பாளையம் கிராமத்தில் வன்னியர்கள் 350 பேர் மட்டுமே வாழும் நிலையில், அதைச் சுற்றியுள்ள காலனிகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் வாழ்வதாலும், அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறைக்கு தூண்டி விட்டு வருவதாலும் எந்த நேரத்தில் தங்களுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வன்னிய மக்கள் அஞ்சி நடுங்குகின்றனர்.

 

குச்சிப்பாளையம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி வெறியும், அரசியல் பகையும் தான்  தான் காரணம் ஆகும். ஊருக்குள் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘‘ இனி மாம்பழம் சின்னத்தை உங்கள் வீடுகளில் வரைவீர்களா? இனி மாம்பழத்திற்கு வாக்களிப்பீர்களா?  என்று கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்னிய சமுதாய மாணவிகள் படிப்பதற்காக பேருந்து ஏறி வெளியூர் செல்ல அனுமதிக்க மாட்டோம் என மிரட்டியுள்ளனர்.

 

வன்னிய சமுதாய மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கதாகும். இந்நிலை தொடர தமிழக   அரசு அனுமதிக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்த வேண்டும். சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடும்,  காயமடைந்த மக்களுக்கு தரமான சிகிச்சையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள், தூண்டியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவரும், கடலூர் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருமான ஆர். கோவிந்தசாமி தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் பழ.தாமரைக்கண்ணன், அசோக்குமார், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர்  அடங்கிய குழு குச்சிப்பாளையம் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறும்.


பொன்பரப்பியில் விடுதலை சிறுத்தைகள் தான் கலவரத்தைத் தூண்டினார்கள். ஆனால், அதற்கு பாமகவும், வன்னியர்களும் தான் காரணம் என்று பொய்யாக குற்றஞ்சாட்டிய திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அவதூறுகளை அள்ளித் தெளித்தனர். வன்னிய மக்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று வெறியூட்டும் பேச்சுக்களை பேசினார்கள். வன்னியர்கள் மீது தங்களுக்கு காழ்ப்புணர்ச்சியும், பகையும்  இல்லை என்றால் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும்.

 

குச்சிப்பாளையம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும். குச்சிப்பாளையம் வன்னியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்க வேண்டும்; இதற்கு காரணமான கும்பலை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் அவர்களின் கபட வேடத்திற்கு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்.’’

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மின் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள்” - அன்புமணி ராமதாஸ் பேச்சு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
They have stopped power generation Anbumani Ramadoss speech

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்ததனர்.  இந்நிலையில் மின்கட்டன உயர்வை திரும்ப பெற கோரி பாமக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் இன்று (19.07.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக  கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “அரசு துறையில் மின் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள். ஏனென்றால் 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவை உச்சத்தில் இருக்கும் போது அரசு சார்பில் செல்லக்கூடிய மின்சாரம் 5 ஆயிரத்து 500 மெகாவாட் தான். 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவையில் வெறும் 5 ஆயிரத்து 500 மெகாவாட் தான் தமிழக அரசு உற்பத்தி செய்கிறது.

மீதம் உள்ள 14 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிகப்படியான மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது. தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கான காரணம் என்னவென்றால் காசு, பணம், துட்டு, மணி, மணி. அரசுத்துறையில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றால் சராசரியாக 3.40 ரூபாய் தேவைப்படும். ஆனால் உச்சப்பட்ச மின் தேவை உள்ள நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

Next Story

'சரண்டர் ஆன ஒருவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும்?' - அன்புமணி கேள்வி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
 'Why should a surrendered man run away; CBI should investigate'-Anbumani interview

'சரண்டர் ஆனவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும். அதுவும் ஏன் காலை 5:30 மணிக்கு என்ன வேலை? கை விலங்கு இல்லை என்றால் என்ன காரணம்?' என ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  

விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தேர்தல் வாக்குறுதி கொடுத்தது ஒன்று. ஆனால் அரசு செய்வது ஒன்று. காவிரி தண்ணீர் பிரச்சனையை சரியான முறையில் தமிழக அரசு கையாளவில்லை. பிரச்சனை வரும் நேரத்தில் அப்பொழுதுதான் ஒரு கூட்டம் நடத்துவார்கள். நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார்கள். உச்சநீதிமன்றம் செல்வோம் என்று சொன்னார்கள். ஆனாலும் இயற்கை நமக்கு அங்கே கர்நாடகாவில் மழையை கொடுத்ததால் இன்று நாம் கேட்ட தண்ணீரை விட மூன்று மடங்கு அதிக தண்ணீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆறு மாதம் இதைப் பற்றி நாம் பேசப்போவது கிடையாது. அதற்கு பிறகு இந்த பிரச்சனை மீண்டும் வரும் பொழுது அனைத்து கட்சிக் கூட்டம் போடுவோம், உச்சநீதிமன்றம் போவோம். இதற்கு ஒரு நிரந்தர தீர்வுதான் என்ன?

அடுத்தது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம். இந்த சட்டத்தை ரத்து செய்த பிறகு கிட்டத்தட்ட 30 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளார்கள். அதை பற்றி திமுக அரசுக்கு கவலையே கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு சென்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெறுவதற்கு கூட திமுகவிற்கு மனசு கிடையாது. அவர்களுக்கு எல்லாமே வியாபாரம் வணிகம் தான். இதையெல்லாம் திமுக மக்களுக்கு செய்யும் துரோகங்கள். தமிழ்நாட்டினுடைய சட்ட ஒழுங்கு தினமும் ஒரு கொலை என்பதாக இருக்கிறது. மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலை செய்துள்ளார்கள். பாமகவின் நிர்வாகி வெட்டி கொலை, அதற்கு முன்பு ஆம்ஸ்ட்ராங், அதற்கு முன்பு அதிமுக, அதற்கு முன்பு காங்கிரஸ் நிர்வாகி என ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு கொலை நடக்கிறது என்பதால் மக்கள் எல்லாம் அச்சத்தில் பயத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

அது ஒரு பக்கம், அடுத்தப்பக்கம் கள்ளச்சாராயம் ஆறாக பெருகிக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் 11 பேர் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறார். மரக்காணம் சம்பவத்தின் போது இரும்புக் கரம் கொண்டு  வேரோடு அறுப்போம் என வசனம் பேசினார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் அதே வசனம் பேசினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை என்கவுன்டரில் போட்டுள்ளார்கள். சரண்டர் ஆன பிறகு சரண்டர் ஆனவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும். அதுவும் ஏன் காலை 5:30 மணிக்கு என்ன வேலை? கை  விலங்கு இல்லை என்றால் என்ன காரணம். அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம். சிபிஐ விசாரணை வந்தால் தான் முழு உண்மை வெளியே வரும். ஏன் என்கவுன்டர் செய்தார்கள்; இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது வெளிவரும்'' என்றார்.