தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம்,கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனதீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால்கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம்,வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலில்20 வருடங்களுக்குப் பிறகுஅதிமுககூட்டணியில் பாமகஅங்கம் வகிக்கிறது. அதிமுககூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (05.03.2021) பாமக தேர்தல் அறிக்கை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.