style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாளுக்கு நாள் உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலை களை குறைக்க கோரி இன்று தமிழகம் முழுக்க மாவட்ட தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் மற்றும் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்பட்டது
.
ஈரோட்டில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் ஆறுமுகம் தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில் உயர்த்தாதே.. உயர்த்தாதே பெட்ரோல், டீசல் விலையை தினம் தினம் உயர்த்தாதே..., மத்தியில் ஆளும் மோடி அரசே பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்திடு, ஏழை ,எளிய மக்களின் தலையில் சுமையை ஏற்றாதே...என கோஷமிட்டனர்.