பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவராகவும், வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி ஜெ குரு. அவரது மறைவுக்குப் பின்னர் குருவின் மகன் கனல் அரசு, 'மாவீரன் மஞ்சள் படை' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இந்த அமைப்பு சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று (14/02/2021) கொடியேற்று விழா நடைபெறுவதாக இருந்தது. இந்த கொடியேற்று விழா தொடர்பாக காவல்துறையில் உரிய முன் அனுமதி பெறப்படவில்லை எனகூறப்படுகிறது. இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் கொடியேற்ற வந்த கனல் அரசு மற்றும் ஆதரவாளர்கள் பொதுமுடக்க காலத்தில் அனுமதியின்றி கூட்டம் சேர்த்ததாக, அவர்களை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.