Skip to main content

காடுவெட்டி குருவின் மகன் கைது!

Published on 14/02/2021 | Edited on 15/02/2021

 

pmk party leader kaduvetti guru son police arrested

 

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவராகவும், வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி ஜெ குரு. அவரது மறைவுக்குப் பின்னர் குருவின் மகன் கனல் அரசு, 'மாவீரன் மஞ்சள் படை' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

 

இந்த அமைப்பு சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று (14/02/2021) கொடியேற்று விழா நடைபெறுவதாக இருந்தது. இந்த கொடியேற்று விழா தொடர்பாக காவல்துறையில் உரிய முன் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் கொடியேற்ற வந்த கனல் அரசு மற்றும் ஆதரவாளர்கள் பொதுமுடக்க காலத்தில் அனுமதியின்றி கூட்டம் சேர்த்ததாக, அவர்களை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டில் 18 ஆண்டுகள் வேலை செய்த பலே கில்லாடி கைது

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

 

Bale Gilladi, who worked abroad for 18 years with a fake passport, was arrested!



போலி கடவுச்சீட்டு மூலமாக சிங்கப்பூரில் 18 ஆண்டுகள் வேலை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர், வடக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (வயது 43). இவர் சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து வருவதாகவும் அதற்கான கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) புதுப்பித்து தரும்படியும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக கடவுச்சீட்டு வழங்கல் அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது உரிய தணிக்கை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், வீரகனூர் காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். 

 

அதன் பேரில் வீரகனூர் எஸ்.ஐ. தினேஷ்குமார் வீரமுத்துவின் வீட்டிற்குச் சென்று தணிக்கை செய்துள்ளார். அப்போது வீரமுத்து சிங்கப்பூரில் வேலை செய்யவில்லை என்பதும் அவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. வீரமுத்துவின் பெயரில் அவருடைய உறவினரான உள்ளூரைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 36) என்பவர் போலியாகக் கடவுச்சீட்டு எடுத்து சிங்கப்பூரில் வாகன ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரிய வந்தது. 

 

ஆள்மாறாட்டம் செய்து போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் எஸ்.ஐ. தினேஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் போலி கடவுச்சீட்டு, போலி ஆவணம் தயாரித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தார். 

 

ராஜேஷ் எப்போது தமிழகம் திரும்பினாலும் அவரைக் கைது செய்ய காத்திருந்த காவல்துறையினர் சென்னை, திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களுக்கும் தேடுதல் அறிவிக்கை (லுக் அவுட்) வழங்கி இருந்தனர். காவல்துறையினர் வலை விரித்துக் காத்திருப்பதை அறியாத ராஜேஷ், நவ. 13 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தலைமையில் காவலர்கள் குழு திருச்சி சென்று ராஜேஷை கைது செய்தனர். அவரை சேலம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். 

 

கடந்த 2002 ஆம் ஆண்டு, வடக்கு ராமநாதபுரத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த உறவினரான வீரமுத்துவின் ரேஷன் கார்டு, பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை திருடிய ராஜேஷ் அதன்மூலமாக போலி கடவுச்சீட்டு பெற்றுள்ளார். அப்போது ராஜேஷுக்கு 18 வயது நிறைவடையாததால் வீரமுத்துவின் பெயரிலேயே போலியாக கடவுச்சீட்டு பெற்று சிங்கப்பூருக்கு பறந்துள்ளார். இதன்மூலம் அவர் 18 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். 

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு அவருடைய கடவுச்சீட்டின் ஆயுட்காலம் காலாவதி ஆகிவிட்டது. அதைப் புதுப்பிக்க முயன்ற போதுதான் காவல்துறையில் வசமாக சிக்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கைதான ராஜேஷை சேலம் மாவட்ட 6-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவரின் உத்தரவின்பேரில் ராஜேஷை சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

 

 

Next Story

ஆடுகளைத் திருடிய கல்லூரி மாணவர்கள்... கைது செய்த காவல்துறை!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

College students arrested for stealing goats

 

தேவக்கோட்டை பகுதியில் ஆடுகளைத் திருடியதாக ஆறு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை பகுதியில் சமீப காலமாக ஆடுகள் காணாமல் போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் இரண்டு இருசக்கர வாகனங்களில் இரண்டு ஆடுகளைக் கொண்டு வந்தனர். 

 

அவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆடு திருடியது தெரிய வந்தது. மேலும், விசாரணையில் இவர்கள் ஆறு பேரும் திருவாடானையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கல்லூரி மாணவர்கள் ஆடு திருடிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.