PMK MLA suffers sudden chest pain

பாமகவின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் இருவர் தொடர்ச்சியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையாக பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையேஏற்பட்டு வரும் அதிகார மோதல்கள் பேசுபொருளாகி வருகிறது. அன்புமணி தலைமையில் மாவட்ட வாரியாக பொதுக்குழுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை சேலம் மாவட்டத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

 PMK MLA suffers sudden chest pain

Advertisment

பொதுக்குழுக் கூட்டத்திற்கான வரவேற்பு போஸ்டரில் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளின் புகைப்படம் புறக்கணிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராமதாஸ்- அன்புமணி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்றாலும் கூட, ராமதாஸின் தீவிர ஆதரவாளராக அருள் அறியப்படுகிறார்.

இந்நிலையில் சென்னையில் சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க வந்திருந்த நிலையில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படத்தை அவருடைய உதவியாளர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

nn

Advertisment

அதேபோல் அருளை தொடர்ந்து பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே.மணியும் நெஞ்சுவலியால் அப்போலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜி.கே.மணி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜி.கே.மணியும் பாமகவில் ராமதாஸ்-அன்புமணி இணைந்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தாலும், ராமதாஸின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாமகவில் மொத்தம் உள்ள 5எம்.எல்.ஏக்களில்மூவர் அன்புமணியை ஆதரிக்கும் நிலையில் ராமதாஸை ஆதரிக்கும் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுபாமகவில் பேசுபொருளாகியுள்ளது.