ADVERTISEMENT

பாமக நிர்வாகியை குடிபோதையில் தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

12:52 PM Apr 12, 2020 | rajavel

ADVERTISEMENT

பாமக ஒன்றிய செயலாளரை குடிபோதையில் தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், ''சின்ன சேலம் மூங்கில்பாடியில் பா.ம.க. ஒன்றிய செயலாளர் சக்திவேலை குடிபோதையில் தாக்கிய காவல்துறை ஆய்வாளர் சுதாகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டது மட்டும் போதாது. வழக்குப்பதிந்து கைது செய்து, பணியிடை நீக்கம் செய்யும் அளவுக்கு அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன.



காவல் ஆய்வாளர் சுதாகர் திண்டிவனத்தில் பணியாற்றிய போது, பா.ம.க.வினர் இருவரைத் தாக்கியது தொடர்பாக, நீதிமன்றத்தின் மூலம் அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்டவர்கள் காவல் பணியில் நீடிக்கக்கூடாது!

காவல் ஆய்வாளர் சுதாகருக்கு கல்வராயன்மலை பகுதியில் மது ஒழிப்பு பணி வழங்கப்பட்டு இருந்த நிலையில், அவர் குடிபோதையில் மூங்கில்பாடி வந்து, மின்சாரத்தை துண்டித்துவிட்டு பா.ம.க. நிர்வாகியை தாக்கியிருப்பது காவல்துறையின் புனிதத்தைக் கெடுக்கும் செயல்!


காவல்துறையின் நோக்கங்களுக்கு மாறாக, மனித உரிமைகளை மீறுவதையும், அப்பாவிகளை தாக்குவதையும் மட்டுமே பிழைப்பாக கொண்ட சுதாகர் போன்றவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாமக வழக்கறிஞர்கள் பிரிவு முன்னெடுக்கும்! இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT