சென்னையில் பா.ம.க., வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு கோரி பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சென்னையில் நேற்று போராட்டம் நடத்தியது. போராட்டத்தின்போது பொது மக்களுக்கு இடையூறு மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், இந்த முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் வாராகி என்பவர் முறையீட்டார்.
இதற்கு உயர்நீதிமன்றம், முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் எந்த அமர்வு விசாரிக்கும் என்பதை பதிவுத்துறை முடிவெடுக்கும் என்று தெரிவித்தது.
இதனிடையே, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி சென்னையில் தாம்பரம், பம்மல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் எம்.பி., ஜி.கே.மணி உள்பட 3000 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.