Advertisment

தமிழ்நாட்டில் இனி எந்த கட்சியும் தனியாக போட்டியிட்டு வெல்ல முடியாது-அன்புமணி

சென்னை தியகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,

Advertisment

அதிமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தையில் 10 அம்ச கோரிக்கையை நாங்கள் முதலமைச்சரிடம் கொடுத்து இதையெல்லாம் நீங்கள் செயல்படுத்த வேண்டும். இது எங்களுடைய கோரிக்கை அதில் முக்கிய கோரிக்கை காவேரி டெல்டா பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்ட பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், காவேரி பாசன பகுதியில் மீத்தேன், ஈத்தேன் என எந்த எரிவாயுக்களும் எடுக்கப்படாமல் உணவு தரும் வேளாண் மண்ணாக மட்டுமே இருக்க வேண்டும்.

Advertisment

pmk

அடுத்த கோரிக்கை மேகதாதுவில் அணைக்கடக்கூடாது என்ற கோரிக்கை. அடுத்து விவசாயிகளின்வங்கி மற்றும் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். அடுத்து 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்கிற கோரிக்கை.நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.கோதாவரி காவிரி நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதைவிட தமிழகத்தில் 20 நீர் பாசன திட்டங்கள் நிலுவையில் இருக்கிறது அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். தமிகத்தில் தற்போது அனைத்து கட்சிகளும் மது கடைகளை ஒழிப்போம் என கொள்கை முடிவு எடுத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் அதுபற்றி பேசாத கட்சிகள் கூட கொள்கை முடிவு எடுத்திருக்கிறார்கள்.அரசு ஊழியர்களுக்கு 2003 ல் உள்ளது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம்.இப்படி தமிழகம் சார்ந்த கோரிக்கைகளை பாமக வைத்திருக்கிறது.

இதுதான் முக்கிய காரணம் அதிமுகவுடன் கூட்டணிக்கு வைத்ததற்கு.

புகழையிலை எதிர்த்து நாங்கள் போராடினோம், திரையில் புகைபிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தினோம்.குட்காவை எதிர்த்து நான் போராடினேன் எங்கள் இயக்கம் போராடியது. பொது இடத்தில் புகை பிடிக்க கூடாது என்ற சட்டம் வேண்டும் என்று போராடினோம். ஆனால் 2004 ல் கூட்டணி சென்றோம் அமைச்சர் பதவி கொடுத்தார்கள் ஒரே ஒரு கையெழுத்து போட்டு பொதுஇடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டுவந்தோம்.அதிகாரம் வந்தவுடன்சுலபமாக இருந்தது.எனவேஅதிகாரத்தை கையில் கொண்டு உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்ற நோக்கத்தில் தான் அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளோம்.

2011-ல் நாங்கள் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி செல்லமாட்டோம் என்று சொன்னோம் உண்மைதான். அன்றைய சூழலில் கலைஞர் இருந்தார், ஜெயலலிதா இருந்தார். தற்போது அவர்கள் கிடையாது. இப்படி 8 ஆண்டுகள் கூட்டணி இல்லாமல் இருந்தோம் ஏதாவது அங்கிகாரம் பாராட்டு கிடைத்ததா?

சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்று 6 சதவிகித வாக்கு பெற்று மூன்றாம் இடம் வந்தோம் ஆனால் அதற்கு ஏதேனும் ஒரு அங்கிகாரம் கிடைத்ததா?

தமிழக மக்களும் எங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. எங்கள் தேர்தல் அறிக்கையைத்தான் தற்போது கோரிக்கையாக வைத்துள்ளோம். அதிமுக கூட்டணியுடன் சென்றால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி எந்த கட்சியும் தனியாக போட்டியிட்டு வெல்ல முடியாது வருங்காலத்தில். எனவேதான் எங்கள் தேர்தல் யூகத்தை மாற்றி இருக்கிறோம்.

admk anbumani ramadoss coalition pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe