ADVERTISEMENT

“சதுப்பு நிலத்தை ஆக்கிரமிக்கும் சதியை தடுத்து நிறுத்த வேண்டும்” - அன்புமணி

06:19 PM Mar 18, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

“பள்ளிக்கரணை ராம்சர் ஈர நிலத்தை கட்டடக் கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமிக்கும் சதியை தடுத்து நிறுத்த வேண்டும்; நிலங்களை மீட்க வேண்டும்” என பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதும், அங்கு 40 அடி அகல சாலை அமைக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கின்றன. நீர் சூழ்ந்த நிலத்தை மீட்கவே இவ்வாறு செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. இது கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. கட்டடக் கழிவுகள் கொட்டப்படும் நிலம் ஒரு காலத்தில் தரிசு நிலம் என்று குறிப்பிடப்பட்டு ஏழை மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும், அந்த நிலம் தான் இப்போது ஆக்கிரமிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கும், இராம்சர் ஒப்பந்தத்திற்கும் எதிரானது. சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படக் கூடாது; சட்ட விரோதமாக பெறப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை அளித்துள்ளது. அதற்கு எதிரான செயல்களை அரசு அனுமதிக்கக் கூடாது. தரிசு நிலம் என்று பட்டா பெறப்பட்டு இதுவரை பயன்படுத்தப்படாத நிலங்களை தமிழக அரசு மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள பிற ஆக்கிரமிப்புகளையும் விரைவாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT