Advertisment

குடியுரிமை சட்டம் யாரையும் குடிபெயர வைக்கும் சட்டமல்ல - திண்டிவனத்தில் அன்புமணி பேச்சு 

திண்டிவனம் அடுத்த மயிலத்தில் பாமகவின் சார்பில் முப்படைகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட1000 -த்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அண்புமணி ராமதாஸ்,

Advertisment

மருத்துவ படிப்பு தகுதியானவர்கள் படிப்பது போக பணவசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை தடுத்து தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே டாக்டர் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

PMK ANBUMANI SPEECH

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் தான் நீட் வருவதற்கு காரணம். ஸ்டாலின் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்துவது குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் உள்ளது என்றார். மேலும் அவர் பேசும் பொழுது, குடியுரிமை சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்களுக்கு பெரிய பாதிப்புள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துகின்றார்.

Advertisment

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் இலங்கையில் அவர்களது குடியுரிமை பறிப்பதற்கான சட்டம் உள்ளது. எனவே குடியுரிமை சட்டம்சிறுபான்மை மக்களை இந்தியாவில் குடியமர்த்த கொண்டுவந்த சட்டமாகும். இது யாரையும் குடிபெயர வைக்கும் சட்டமல்ல என்றார்.

இந்த நிகழ்வில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

anbumani ramadoss citizenship amendment bill pmk
இதையும் படியுங்கள்
Subscribe