/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/RAMADOSS33322.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு (மே 10 முதல் மே 24 வரை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08/05/2021) அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப்பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்மருத்துவர்களும் திரையுலகினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் பாமகவின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில்நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது பயனுள்ள நடவடிக்கை! தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனாவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இதுதான் சிறந்த வழி. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்!
முழு ஊரடங்கு காலத்தில் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இது கடந்த காலத்தில் திமுகவும் வலியுறுத்திய கோரிக்கைதான். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று வலியுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)