Published on 12/03/2019 | Edited on 12/03/2019

17வது மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி எண்ணிக்கையை முடித்துள்ளன. இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் முதலாவதாக இணைந்தது பாமக 7 தொகுதிகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை என்று உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது. மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, அரக்கோணம், சிதம்பரம், தர்மபுரி, திண்டுக்கல் ஆகில் தொகுதிகளை கேட்பதாகவும்,இதில் ஆரணியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்றும் தெரிய வருகிறது.