Pmk Anbumani insists 'Avin should not deceive customers'

Advertisment

ஆவின் பச்சை உறைபால் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும், அல்லது ஆரஞ்சு உறை பாலின் விலையை குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் லிட்டருக்கு ரூ.16 கூடுதலாக கொடுத்து ஒரு லிட்டர் ரூ.60 என்ற விலைக்கு ஆரஞ்சு உறை பாலை வாங்கும் நிலைக்கு ஆவின் வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பச்சை உறை பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் ஆரஞ்சு உறை பால் விலை உயர்த்தப்பட்டது தான். ஆரஞ்சு பால் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டதால் அதன் தேவை குறைந்து விட்டது. குறைந்த விலையில் கிடைக்கும்பச்சை உறை பால் தேவை அதிகரித்திருக்கிறது.

பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும். பச்சை உறை பாலை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி ஆவின்விநியோகித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் ஒருபுறம் மக்களுக்கு பாதிப்பு; மறுபுறம் தனியார் நிறுவனங்களுக்கு லாபம். வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை உறை பால் விநியோகத்தை குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால்ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்”எனத்தெரிவித்துள்ளார்.