Advertisment

நாளை பிரதமர் வருகை... சென்னையில் போக்குவரத்து மாற்றம்! 

 PM to visit tomorrow ... Traffic change in Chennai!

நாளை, பிப்ரவரி 14 ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக கடந்தமாதம் 31 தேதி தகவல்கள் வெளியாகி இருந்தன.அண்மையில் டெல்லிசென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியானது. மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார் என்ற தகவலும்வெளியாகியிருந்தது.

Advertisment

இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி சென்னையில் நாளை 5 மணிநேரம்போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. நாளை காலை8 மணி முதல்மதியம் ஒருமணி வரை இந்தப் போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் இருக்கும்.சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் சென்னைபெருநகரஎல்லைக்குள் வர அனுமதியில்லை. கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் வரும் வாகனங்கள் நாயர்பாலத்தின் வழியாக அண்ணா சாலை செல்லலாம்.ராயபுரத்தில் இருந்து பாரிமுனைசெல்லும்வாகனங்கள் இப்ராகிம் சாலை மிண்ட்சந்திப்பு வழியாக செல்லலாம்.அண்ணா சாலையில் இருந்து ராயபுரம் செல்லும் வாகனங்கள்ஸ்பென்சர், பொன்னி சாலை,நாயர்பாலம் வழியாக செல்லலாம்.சவுத்கெனால்ரோடு - காந்திசாலை செல்லகச்சேரிசாலை,லஸ்,ராயப்பேட்டை சாலை வழியாக செல்லலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பிப்.14 தமிழகம் வரும் பிரதமர் மோடிபிரச்சாரமும் மேற்கொள்வார் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்.14 காலை7.50 க்குபுறப்பட்டு 10.35 க்கு சென்னை வரும்பிரதமர், மூன்றுமணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார்என்பது குறிப்பிடத்தக்கது.

modi traffic Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe