style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஒன்றிணைந்து நடத்திவரும்போராட்டத்திற்கு பிரதமர் மோடிசெவிசாய்த்து அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
இந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரியும், குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வலியுறுத்தியும், டெல்லியில் மிகப்பெரிய பேரணியை நடத்தியிருக்கிறார்கள். தமிழக விவசாயிகளும் இதே பிரச்சினைகளைத்தான் சந்தித்து வருகிறார்கள். ஆகவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாயிகளின் வலியை உணர்ந்து நீண்ட கால தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.