போர்க்குற்ற விசாரணை - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

pm narendra modi dmk party president mkstalin

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை அரசைசர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி லண்டனில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சகோதரி அம்பிகையின் உணர்விற்கும், தமிழர்களின் உணர்விற்கும் மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது.

கடந்த ஜனவரி மாதத்திலேயே பிரதமருக்குக் கடிதம் எழுதி அதில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டிருந்தனர். ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைளை ஆதரித்து ஈழத்தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்தியா வாக்களிக்க வேண்டும். இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதை உறுதிசெய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தனது நேரடிபார்வையில் எடுத்திட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

PM NARENDRA MODI
இதையும் படியுங்கள்
Subscribe