COIMBATORE ARRIVED PM NARENDRA MODI

Advertisment

சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. விமான நிலையத்தில் பிரதமரை தமிழக ஆளுநர்பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, அரசு விழா நடைபெறும் கொடிசியா அரங்கிற்கு கார் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். வழிநெடுகிலும் பிரதமருக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழாவில் பல்வேறு திட்டங்களைக் காணொளி காட்சி மூலம் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ரூபாய் 12,400 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை முதல்முறையாக பிரதமர் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.