'ஜெயலலிதா ஜி'-யை எப்படி நடத்தினார்கள்? - பிரச்சாரத்தில் மோடி ஆவேசம்!

pm modi

தமிழக சட்டப்பேரவைத்தேர்தல், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காகஇன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு 'வேல்' பரிசளிக்கப்பட்டது. பின்னர் 'வெற்றிவேல்! வீரவேல்!' என்ற கோஷத்தோடு தொடங்கி, பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமரின் உரை வருமாறு:

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணி. கேட்கும்போதெல்லாம் தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களைக் கொடுக்கிறது மத்திய பாஜக அரசு. ஐக்கிய நாடுகள் சபையில், தமிழில் சில உதாரணங்களைக் கூறியதில் பெருமையடைகிறேன். விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த அரசு பாடுபடுகிறது. தாய்மொழியில் மருத்துவக்கல்வி, தொழிற்கல்வி வழங்க மத்திய அரசு விரும்புகிறது.

'தேவேந்திரகுல வேளாளர்' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாட்டின் வளர்ச்சியேபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கம். திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குக் குடும்பம்தான் முக்கியம். திமுக, காங்கிரஸ் கூட்டணியை தமிழகமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழக முதல்வரின் தாயை திமுக இழிவுபடுத்தியுள்ளது. இது கண்டிக்தக்கது. பெண்கள் குறித்து திண்டுக்கல் ஐ.லியோனியும்பெண்களைக் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். திமுக பட்டத்து இளவரசருக்காக, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். அவரும்மோசமான கருத்துகளை வெளியிட்டார். திமுக அவரை தடுக்க எதுவும் செய்யவில்லை. மார்ச் 25, 1989-ஐ ஒருபோதும் மறக்க வேண்டாம். தமிழக சட்டசபையில், திமுக தலைவர்கள் அம்மா ஜெயலலிதா ஜியைஎப்படி நடத்தினார்கள்?திமுக மற்றும் காங்கிரஸ், பெண்கள் முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளிக்கமாட்டார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Assembly election Narendra Modi Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe