Advertisment

கெடிலம் ஆற்றில் குளித்த 7 இளம்பெண்கள் உயிரிழப்பு... பிரதமர் மோடி இரங்கல்!

PM Modi mourns to kedilam incident

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் நேற்று 7 சிறார்கள் குளித்துக் கொண்டிருக்கையில் நீரில் மூழ்கினர். உடனடியாக ஏழு பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் 7 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிறார்களின் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் மனதை கலங்கவைத்தது.

Advertisment

இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவியது. நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் லெப்பைக்குடியில் காரில் விளையாண்டு கொண்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஒரே நேரத்தில் 7 சிறார்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் விவரம் சங்கீதா(16), மோனிஷா(16), திவ்யதர்ஷினி(10), பிரியதர்ஷினி(15), நவநிதா(18), சுமந்தா(18), பிரியா(18).

Advertisment

modi

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தமிழகத்தின் கடலூரில் சிறுமிகள், இளம்பெண்கள் இறந்தது வருத்தமளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு என இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

modi Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe